பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைதானார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சென்ற முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணை நீர் திறப்பது குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் பேசிய முதல்வர், கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை எனவும் தெரிவித்தார். பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு தற்போது பதிலளித்த முதல்வர், பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைதானார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அரசு மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். எதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி பத்திரிகை விளம்பரத்துக்காக புகார்களை கொடுக்கிறார். அவர், தரும் புகார்களின் உண்மை தன்மையை ஊடங்கங்கள் முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…