விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்? திருமாவளவன் ட்வீட்
விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்?என்பது குறித்து திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விவசாய சட்டங்களை ஏன் எதிர்க்கவேண்டும்? 1) விவசாய உற்பத்தி, வணிகம், போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்’மயமாக்குவதன் மூலம் விவசாய குடிகளுக்கு இவை எதிராக உள்ளன. 2) மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கின்றன. 3) நாடாளுமன்றத்தில் அடாவடித்தனமாக இவை நிறைவேற்றபட்டுள்ளன.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
#விவசாய_சட்டங்களை_ஏன்_எதிர்க்கவேண்டும்?
1) விவசாய உற்பத்தி, வணிகம், போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்’மயமாக்குவதன்
மூலம் விவசாய குடிகளுக்கு இவை எதிராக உள்ளன.2) மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கின்றன.
3) நாடாளுமன்றத்தில் அடாவடித்தனமாக இவை நிறைவேற்றபட்டுள்ளன. pic.twitter.com/PBpSDGRVjS
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 28, 2020