நாடு முழுவதும் ‘கூல்-லிப்’பை ஏன் தடை செய்யக்கூடாது.? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் கூல்-லிப் போதைப்பொருளை ஏன் தடைசெய்ய கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Madras High Court

மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை.

இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த வழக்குகள் மொத்தமாக இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது. கூல்-லிப், குட்கா போன்ற போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்த போதைப்பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு சிறு பெட்டிக்கடைகளில் கூட சரளமாக கிடைக்கிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் அதிகமாக வருகிறது.

அதிலும் குறிப்பாக கூல்-லிப் போதைப்பொருளானது கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. இது மாணவர்களின் சிந்தனையை அழிக்கிறது. இதனை அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்கள் மத்தியில் வன்முறைகள் எழுகிறது. இப்படி பதிப்பபை ஏற்படுத்தும் கூல்-லிப்பை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது.?மேலும், இதற்கு அடிமையாக உள்ள மாணவர்களை அவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் ஏன் முறையான கவுன்சலிங் அளிக்க கூடாது.? இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்  எனக் கூறி வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி ஒத்திவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்