டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அண்மையில் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை கட்டுப்பாட்டுடன் அறிவித்து வருகிறது. அதில் ரயில்கள், விமான சேவைகள், ஹோட்டல்கள் மதுபான கடைகள் கூட திறக்க அனுமதி கொடுத்து இருக்கும்பொழுது தட்டச்சுப் பயிற்சி மையங்கள் திறக்க அனுமதிக்கவில்லை.
எனவே அண்மையில் மதுரையை சேர்ந்த செந்தில் என்பவர் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரியும் தமிழக அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை. எனவே தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும்…
அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.…
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…