வடமாநிலத்தவர்கள் பற்றி சீமான் பேசும் ஒரு வீடியோவை பகிர்ந்து இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வடமாநிலத்தவர்கள் இங்குள்ளவர்கள் தாக்கப்படுகிறார்கள் என பொய்யான தகவல் பரவியதாலும் , ஹோலி பண்டிகைக்காக பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டதாலும் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வெளியேறுகிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது.
அரசு நடவடிக்கை :
பின்னர் தமிழக அரசு , பீகார் அரசு உடனடியாக தலையிட்டு ஆய்வு செய்து வதந்திகளை பரப்பியோர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வடமாநிலத்தவர்கள் நலனை உறுதி செய்தனர்.
சீமான் பேச்சு :
இந்நிலையில், பிரபல அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் முதல்வராக இருந்தால், வடமாநில தொழிலார்களை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், அவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு போய்க்கொண்டு இருப்பார்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் கேள்வி :
இந்த விடியோவை பதிவிட்டு, ஹிந்தி பேசும் நபர்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசும் சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசியல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…