இரவிலும், ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடு இருப்பதால் மக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார பாதிப்புகள் பெரிதாக இருக்காது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை போதுமானதாவையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கூறப்படுகிறது.
மக்கள் மத்தியில் கொரோனா குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தவும், நிலைமை தற்போது இயல்பாக இல்லை என உணர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது, திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு செல்வதை குறைந்து கொள்வார்கள்.இதனால் தொற்று பரவல் வேகம் குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரவு நேர தொலைதூர பயணங்கள் பெரிதும் தவிர்க்கப்படுவதும் தொற்று பரவுவதை தடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரவு நேர பொதுமுடக்கம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் நடவடிக்கைகள் பெரியளவு பாதிக்கப்படாது என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு தடுக்கப்படுவதுடன் உதவித்தொகை என்ற பெயரில் சில ஆயிரம் கோடி தரும் நிதி சுமையும் அரசுக்கு இருக்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…