புதிய படிவம் வழங்குவது ஏன்? -ஆவின் நிர்வாகம் விளக்கம்!
பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் என ஆவின் நிர்வாகம் விளக்கம்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம்,, 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட முகவரியில் பால் அட்டைதாரர்கள் வசிக்காததை கண்டறிந்ததால் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பத்தில் தங்களின் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடமிருந்து கோருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.