நெடுவாசல் மக்களின் போராட்டம் நீண்டு கொண்டே போவது ஏன்….!!!
நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அங்கு வாழும் மக்களின் அச்சமாக உள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்:
இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில் தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே . 2015 இல் இந்திய அரசாங்கம் “Discovered Small Field ” என்னும் மசோதாவை கொண்டுவருகிறது .2016 இல் ஹைட்ரோகார்பனை வெளியில் எடுக்கும் நிறுவனங்களுக்கான ஏலம் தொடங்கப்பட்டது .
நெடுவாசலில் உள்ள 10 sqkm இடம் கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த நிறுவனம் பாஜகவை சேர்ந்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுனப்பா உருவாக்கியது.
நெடுவாசல்:
காரைக்கால் நெடுவாசல் ஆகிய இரண்டு பகுதிகளிலிருந்தும் சுமார் 430000 மெட்ரிக் டன் அளவுக்கு ஆயில் அல்லது ஆயிலுக்கு நிகரான கேஸ் எடுக்கப்பட இருகின்றது. Gem நிறுவனமும் சரி ONGC யும் சரி இதுவரை எந்த முறையினை பின்பற்றி வாயுவை வெளியில் எடுக்க போகின்றோம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றே கூறுகின்றனர் ..இதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
போராடும் மக்கள் கூட்டம்:
முதல்முறையாக ஒட்டுமொத்த இளைஞர்களும் பொதுமக்களும் புதுவிதமான அதாவது கேட்டது நடக்கும் வரை போராடுவோம் என்கிற முறையை சல்லிக்கட்டு போரட்டத்தில் அறிமுக படுத்தியது . அதில் வெற்றியும் கண்டது .
சல்லிக்கட்டு போராட்டத்திற்கும் நெடுவாசல் போராட்டத்திற்கும் நல்ல நோக்கங்களை தவிர முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. ஆம் சல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பரவியது. ஆனால் நெடுவாசல் போராட்டம் அங்கு தொடங்கி இன்னும் சென்னையை வந்தடையவில்லை .
திரும்பி பார்க்காத தமிழகஅரசு:
நெடுவாசல் போராட்டம் சென்னையில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் இந்தியாவும் சென்னையை கவனித்திருக்கும். இப்போது நெடுவாசலை கவனிக்கவில்லை என்று சொல்லவில்லை. யாருக்கும் தொந்தரவில்லாமல் மீடியாக்களின் மூலமாக மட்டுமே பிறரை சென்று அடைவதினால் நெடுவாசல் போராட்டம் ஒரு தாக்கத்தை அரசிடம் ஏற்படுத்தவில்லை.
இந்த போராட்டம் முற்று பெரும் என்று நம்ப வேண்டாம். ஆட்சியாளர்களே…,