அரசு அவசரகதியில் பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? – மு.க.ஸ்டாலின்
கொரோனா வைராசை கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை தமிழகத்தில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 78 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸின் தீவிர பரவலால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் சேயால்படாத காரத்தால், நடைபெறவிருந்த பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இதற்க்கு அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘கொரோனா வைராசை கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. நோய்த் தொற்று காலத்தில் ஏன் அவசரம்? மாணவர்களுக்கு ஏன் நெருக்கடியும் மன உளைச்சலும்? இயல்பு நிலை திரும்பட்டும்! உரிய அவகாசத்துடன் தேர்வினை நடத்திடுக!’ என தனது ட்வீட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.