3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!
நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம் என அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த பெயராக இருக்கிறது. அதற்கு காரணமே அவர் பேசிய விஷயங்கள் தான். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள்” என பேசியிருந்தார்.
அது மட்டுமின்றி, கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பி.எம் ஸ்ரீ பள்ளிகள் நிறுவுவதற்கான ஒப்புதல் வழங்கியதாக கடிதத்தையும் நேற்று தர்மேந்திர பிரதான் வெளியீட்டு இருந்தார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷும் பதிலடி கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வியை எழுப்பியுள்ளார். அதில் “தர்மேந்திர பிரதான் அவர்களே உடைக்கப்படாததை சரிசெய்யாதீர்கள்..தமிழ்நாட்டின் கல்வி முறை சிறப்பாக இருக்கிறது. அதற்குள் NEP-ஐ கொண்டு வருவது சீர்குலைப்பதான விஷயம்.
தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர். எனவே தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது. சிலர் கூறுவது போல், மூன்றாம் மொழியைக் கற்க உண்மையான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில வாரியப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்? மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்பு கொடுங்கள்.
தமிழ்நாட்டில் இப்போது இருமொழிக் கொள்கையில் ஆங்கிலமும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. எனவே, தமிழ் மொழி என்பது எங்களுடைய வேர்..தேவையில்லாமல் மூன்றாவது மொழியை திணிக்க முயற்சி செய்யாமல் அப்படியே விடுங்கள். எங்களுடைய மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறப்பாக பயிற்சி பெற்று சர்வதேச அளவில் சிறந்து விளங்க உறுதி செய்து வருகிறோம்.
நான் அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன்..தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் புதுமைப்பித்தன்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?இது மொழி பற்றியது மட்டுமல்ல – முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது. தமிழ்நாடு தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் சமரசம் செய்யாது. சிறப்பை வழங்கும் ஒரு அமைப்பை சீர்குலைக்க வேண்டாம்” எனவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Hon. Union Minister @dpradhanbjp avargal
Don’t Fix What Isn’t Broken: Tamil Nadu’s Education System Delivers, NEP Disrupts!
The attack on Tamil Nadu’s stand on NEP and the language issue is not only misleading—it completely ignores the bigger picture.
This is not just about…
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 12, 2025