உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிருந்த நிலையில், பிரதமர் மோடியிடம் வாதிட தயார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் இன்று காணொலி வாயிலாக ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது என்று மோடி குற்றசாட்டியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியிடம் வாதிட தயார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் தலையீட்டால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. புதுச்சேரி அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ளது. உண்மையாகவே பிரதமர் ஜனநாயகத்தை மதிப்பவராக இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை கிரண்பேடி பறிக்கும்போது தட்டிக்கேட்காதது ஏன்?, இரட்டை வேடம் போடுகிறார் பிரதமர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…