BREAKING: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு காரணம் ஏன்.? முதல்வர் விளக்கம்.!
அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது பேசப்பட்ட முடிவுகளைபற்றி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
மேலும், கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு காரணம் ஏன்.? என்ற விளக்கத்தை கொடுத்தார். அதில், கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று முன்பே கணித்து வியாபாரிகளை எச்சரித்தோம். கொரோனா தொற்று குறித்த அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை. பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற வேண்டும் என்று கோயம்பேடு வியாபாரிகளிடம் பலமுறை கேட்டுக் கொண்டோம். ஆனால் வேறு இடத்திற்கு மாறுவதற்கு கோயம்பேடு வியாபாரிகள் தயக்கம் காட்டினார்கள். இதனால் அவர்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என கருதினர்.
மேலும், அரசு நடவடிக்கை எடுக்காததால் தான் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று கூறுவது தவறு என தெரிவித்தார்.