டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? – டிடிவி தினகரன்
மதுபானக் கூடங்களையும் மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது என டிடிவி தினகரன் ட்வீட்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது என்றும் தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? 1/3 @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 5, 2022