வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? – டிடிவி தினகரன்
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி இருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி இருப்பதற்கு டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குச் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரில் சென்னையில் அமைந்திருந்த நெடுஞ்சாலைகளின் பெயரையும் மாற்றி, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராகவும் இருக்கும் காபந்து அரசின் முதலமைச்சர் பழனிசாமி இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்? வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
வீட்டுக்குப் போகப்போகிற நேரத்தில் எதற்காக இந்த விபரீத விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்? உடனடியாக இந்த உத்தரவுகளை திரும்பப் பெற்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெயரிலேயே அந்தந்த சாலைகள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 14, 2021