கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போல குழப்ப ரேகைகள் தொடர்வது ஏன்? – டிடிவி தினகரன்
தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா?
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை ஒதுக்கியது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான உத்தரவில் கணினி அறிவியல் பாடப்பிரிவை மட்டும் ஒதுக்கியது ஏன்?
கணினி பயன்பாடின்றி இன்றைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது தொடர்பான பாடம் கற்பிக்கப்படவில்லையென்றால் பரவாயில்லையா? கல்வித்துறையில் மட்டும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப் போல குழப்ப ரேகைகள் தொடர்வது ஏன்?
இந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா?’ என பதிவிட்டுள்ளார்.
இந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுமா? (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 30, 2021