டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூடாதது ஏன்? : அமைச்சர் தங்கமணி கேள்வி..!

Published by
Dinasuvadu desk

படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்த உடனேயே டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூட வேண்டியதுதானே என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, கடந்த மே மாதம் 810 கடைகளை திறக்க அரசாணை வெளியிட்டது சரியா என்று பேரவையில் தினகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல படிப்படியாக மதுவிலக்கு என அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

படிப்படியாகத்தான் மதுக்கடைகளை குறைக்க முடியும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, நீதிமன்ற உத்தரவின்பேரில் கடைகள் மூடப்பட்டதையும் குறிப்பிட்டார். தற்போது 3 ஆயிரத்து 866 கடைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மதுபான உற்பத்தியில் 25 சதவீதம் யாருடைய குடும்பத்தை சார்ந்தது என கேள்வி எழுப்பிய அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா வழியில் உள்ளவர்கள் என்றால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற உடன் சாரய ஆலைகளை முட வேண்டியது தானே என்றும் வினவினார்.

அப்போது டிடிவி தினகரன் பெயரைக் குறிப்பிடாமல் உங்கள் குடும்பத்தினர் என அமைச்சர் குறிப்பிட்டார். வருமானம் வர வேண்டும் என்பதால் இது போன்ற கருத்துகள்  தெரிவிக்கப்படுவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் தனது குடும்பத்தினர் மது ஆலைகள் நடத்தவில்லை என்றும், உறவினர்கள் நடத்துவதற்கான தான் எப்படி பொறுப்பாக முடியும் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

8 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

10 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

10 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

10 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

12 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

12 hours ago