டிஜிபியை சந்தித்தது ஏன்..? – திருமாவளவன் விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என திருமாவளவன் பேட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அண்ணாமலை பேசிய தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது. அண்ணாமலை சட்ட ஒழுங்கை சீரழிக்கும் சீர்குலைக்கும் விதமாக தொடர்ந்து பேசுகிறார். திட்டமிட்டு வன்முறையை பரப்பும் வகையில் பாஜகவினர் பேசி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும், சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும், அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என குறிவைத்து பாஜக செயல்படுகிறது. பாஜகவின் இந்த சதி நடவடிக்கையை சுட்டிக்காட்டி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி-யிடம் அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.