எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள்?நான் என்ன தப்பு செய்தேன்?அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கேள்வி

Published by
Venu

எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் வினவியுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார்.

முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.மேலும்  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்னரும் அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன்.பரமக்குடி சட்டமன்ற தொகுதியை கூட சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறச் செய்துள்ளோம்.எதற்காக இப்படி செய்தார்கள்? என்ன காரணம் என்றும் தெரியவில்லை.ஆட்சியில்  அமைச்சராக இருந்திருக்கிறேன்,படித்தவர்கள் அமைச்சராக இருக்கிறோம்,நன்றாக வேலை செய்கிறோம்.மக்களுடன் கலந்து ஆலோசித்து வங்கித் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுமூகமாக முடித்துள்ளோம்.எந்த பிரச்சினை இல்லாமல் முடித்துளோம்.இந்த அறிவிப்பு என்னெவற்றும் தெரியவில்லை.எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை.நான் என்ன தப்பு செய்தேன் என்றும் தெரியவில்லை.வேலூர் தேர்தலில் கூட சிறப்பாக பணியாற்றியுள்ளோம்.எந்த விஷயமும் செய்யவில்லை,ஒரு சிறு தவறு கூட செய்யவில்லை.எதற்காக இப்படி செய்தார்கள் என்றும்  தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

Published by
Venu

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

3 minutes ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

40 minutes ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago