தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? – கே.எஸ்.அழகிரி
தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கண்டறிய பயன்படுத்தப்படும் ரேபிட் கிட்களை மத்திய அரசு, சீனாவிடம் இருந்து வாங்கியது. பின்னர் வாங்கிய கருவிகளை மத்திய அரசு மாநிலம் வாரியாக பிரித்து கொடுத்தது.ஆனால் ராஜஸ்தானில் விரைவான சோதனைக் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் போது தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையெடுத்து குஜராத்திலும் ரேபிட் கிட்டில் எடுக்கப்படும் பரிசோதனைகள் 6% முதல் 70% வரை மாறுபட்ட முடிவுகளாக வருவதாக குற்றச்சாட்டிய நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், சீனநாட்டிலுள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் மத்திய அரசு வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்த கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை.
இந்த நிறுவனத்திடம் கருவிகளை வாங்காமல் ரூபாய் 600அதிகவிலை கொடுத்து சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பு பிர
தமர் மோடிக்கும் சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்த கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை.
— KS_Alagiri (@KS_Alagiri) April 24, 2020