முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் ஓடி ஒழிவது ஏன்?- பிரேமலதா

Default Image

தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது என பிரேமலதா பேட்டி.

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் நிலையில்,  இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கட்டட விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரேமலதா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘இந்த கட்டிடம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டு திமுக ஆட்சியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்கள் உடைமைகளை பொருட்களை எடுத்து கொண்டு சாலையில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளனர். எங்கே செல்வது என்று தெரியாமல் மக்கள் நிற்கின்றனர். இந்த நிலைமைக்கு ஆட்சியாளர்களே  காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 10 நாட்கள் ஆகியும் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழக காவல்துறையால் முன்னாள் மந்திரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நகைப்பாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் வழக்கை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் ஓடி ஒழிவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்