ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆர்.எஸ்.பாரதி
அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுக கொறடா ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுகவில் பொறுப்பில் இருப்பதாக சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் 3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளர் சீனிவாசனிடம் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார்.அதன் பின்னர் அவர் பேசுகையில்,சபாநாயகர் மீது நம்பிக்கையில்ல்லா தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் அளித்த மனுவை பேரவை செயலாளரிடம் அளித்தோம்.அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பதவிநீக்கம் செய்யப்படாமல், அதில் பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.