ஜே.பி.நட்டா ஏன் இதோடு நிறுத்தினார்..? இதையும் சொல்லியிருக்கலாமே? – ப.சிதம்பரம்
பூர்த்தியான எய்ம்ஸ் மருத்துவமனை பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே? என ப.சிதம்பரம் ட்வீட்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான வேலைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
ஜே.பி.நட்டாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரை ஏய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் திரு நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்? பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?’ என விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?
பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?
— P. Chidambaram (@PChidambaram_IN) September 24, 2022