விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!
எனது மகள் ரசித்த விநாயகர் சிலையை அவளின் விருப்பத்துக்காக ட்விட்டரில் பகிர்ந்தேன். நாட்டில் பல பிரச்சனை இருக்கையில் இதில் கயிறு திரிக்க பார்ப்பது சந்தர்ப்பவாதிகள் சதி வேலை – உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விநாயகரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ட்விட்டர் ட்ரண்டிங் வரை வந்துள்ளது. வழக்கமாக தி.மு.கவிலிருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், உதயநிதியின் ட்விட் அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடிபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசும் பொருளாக்காதவர்கள் தற்போது, பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்து அதை பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதை பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாக கயிறு திரிப்பது பார்ப்பது சந்தர்ப்பவாதிகள் சதிவேலை. எனது மகள் ரசித்த விநாயகர் சிலையை அவளின் விருப்பத்துக்காக ட்விட்டரில் பகிர்ந்தேன். எனது அம்மா வாங்கிய சிலையுடன் என் மகள் விருப்பத்தின் பெயரில் புகைப்படம் எடுத்தேன். எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது என் தாயாருக்கு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. pic.twitter.com/4s0csUBP43
— Udhay (@Udhaystalin) August 24, 2020