#Breaking:”ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன்” -முதல்வர் விளக்கம்…!

Default Image

மத்திய அரசை… ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.

தமிழக 16 வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில்,இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது இன்று நடைபெற்று வருகிறது.அதில்,முதல்வர் உள்பட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,”தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள்.அதற்கான விளக்கம் வேண்டும்”,என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில்,இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:”ஒன்றிய அரசு என்று சொல்வதை சமூக குற்றம் என்று சிலர் சொல்கிறார்கள்.ஆனால்,அரசியல் அமைப்பு சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த சொல்லைத்தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல்,1957 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என்ற சொல்லை முன்னதாக நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.

எனவே,ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல.ஒன்றியம் என்பதில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது.அதனால்,ஒன்றிய அரசு என்பதை நாங்கள் எப்போதும் பயன்படுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்