விதிமுறை மீறி பேனர் வைப்பது ஏன் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி !

தமிழகத்தில் விதிமுறைகள் மீறி பேனர் வைக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக தலைமை செயலாளருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2017 ம் ஆண்டு விதிமுறைகளை மீறி சாலையே ஓரங்களில் பேனர்கள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆஜராகி விளக்கமளித்தார். அதன் படி, பேனர்கள் வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் முதல்வர் , துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்காக சாலை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. இதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசே இதுவரை பேனர் வைக்காமல் இருக்க எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இது குறித்த வழக்கில் ஆகஸ்ட் 7 ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025