தினம் தினம் ஒரு கெட்டப்பில் வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நித்தியானந்தா.அந்த வகையில் இன்றும் ஒரு வீடீயோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அந்த வீடியோவில்,திருவண்ணாமலையில் நான் இருந்த பொழுது என்னை அடிக்காமல் விட்டிருந்தால் அங்கேயே 100 ஆசிரமத்தோடு இன்னொரு ஆசிரமம் என்ற பெயருடன் அங்கு இருந்திருப்பேன் .நான் எந்த சாமியாருக்காவது போட்டியாக வந்தேனா?….கிடையாது . இன்னொரு 4 பேர் சேர்ந்து பெங்களூரிலும் இருக்க விடாமல் அடி அடின்னு அடிச்சா நான் என்ன பண்ணுவ ?..சிவா ராமானு வாழ்ந்து போய் அந்த லிஸ்ட்ல ஒரு மெம்பரா ஆ போய் மறைஞ்சிருப்ப.
அந்த 100 அடிக்கு 200 அடி கட்டிடத்துக்குள் எங்கேயோ ஒரு மூலைக்குள் முடங்கி கிட்டு ,யாரோ வர்ரவங்க 4 பேருக்கு மீனாட்சி மீனாட்சினு சொல்லி வாழ்ந்து போயிருப்பேன். அங்கையும் இருக்க விடாம , ரவுண்டு கட்டி அடித்தால் நான் என்னதான் செய்வது.
உடனே மீனாட்சி மீனாட்சி என்றேன். அதற்கு என்னாச்சி என்னாச்சி தம்பினு கேட்டார். கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறார்கள் தாயே என்றேன். அதற்கு கவலைப்படாதே ஒரு கோவில் கட்டி கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.மீனாட்சி மீனாட்சி என்றேன். அம்மா என்னாச்சி என்னாச்சி என்று கேட்டார். ஆதீனத்துக்குள் வரக்கூடாது என்கிறார்கள் என்றேன். அதுக்கென்ன கவலைப்படாதே தம்பி உனக்கு ஒரு ஆதீனம் கட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.
பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மாட்டேன் என்கிறார்கள். தாயே என்றேன். அதுக்கென்ன விடுடா தம்பி பார்த்துக்கலாம் என்று சொன்னார். அவ்வளவுதான். ஆசீர்வாதம் செய்தார். கைலாசம் அமைந்துவிட்டது. இதற்கு மேல் நான் என்ன சொல்வது.ஒரு 4 பேருக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டு கோவிலில் போய் உண்ட சோறு ஒரு கவளம் வாங்கி தின்றுவிட்டு அண்ணாமலையாரை பார்த்து நினைத்து வாழ்ந்து செத்து போயிருப்பேன்.
என்னைய ஏன்டா இவ்வளவு பெரிய ஆள ஆக்கினீங்க. இது என் கிரகமா… உங்க கிரகமா யாருக்கு தெரியும். திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ஓடும் போது இவன் ஓடுகாலி பய. விட்டு விடுங்கடா என்று விட்டு இருந்தால் நான் அங்கே போய் வாழ்க்கையில் நிம்மதியாக இருந்திருப்பேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…