அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? – பேராசிரியர் தீபக் நாதன்

அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என தீபக் நாதன் ட்வீட்.
சென்னை கமலாலயத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாக்கியராஜ், இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதிலும் இத்தனை நாடுகளுக்கு எப்படி பயணிக்கிறார்? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் என்று வியக்கிறேன்.
தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் தீபக் நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்ச்சி
அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? Why do you want to denigrate disability? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். Respect psychosocial disabilities!’ என பதிவிட்டுள்ளார்.
அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? Why do you want to denigrate disability? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். Respect psychosocial disabilities!
— பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) April 20, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025