ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள்..? தமிழக நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய மத்திய தொழிற்படை போலீசார்…!
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை போலீசார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து, விமான நிலைய உயா் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு வந்து அமைச்சரை சமாதானப்படுத்தினா்.