” எதற்கு கேட்கிறாய் வரி.., யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா” – அமைச்சர் மனோ தங்கராஜ்
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
மத்திய நிதி அமைச்சகம், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது அத்துடன் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘” எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா” என்று கட்டபொம்மன் வெள்ளையர்களை பார்த்தே கேட்டார், நாம் ஒன்றிய அரசை பார்த்து கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.
பெரும் தொகை செலவு செய்து பயணம் செய்ய முடியாத சாதாரண மக்கள், பல மாதங்களுக்கு முன் காத்திருந்து ரயிலில் டிக்கெட் பதிவு செய்வது, விமானங்களில் பறக்கும் பிரதமர் மோடி மற்றும் மோடியின் சகாக்களுக்கு எப்படி புரியும்? கடினமான சூழலில் பயணங்களை தவிர்க்கும் மக்களின் தலையில் பெரும் மூட்டையை தூக்கி வைக்கிறது ஒன்றிய அரசு.
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 3/3
— Mano Thangaraj (@Manothangaraj) August 31, 2022