தொல்லியல்துறை வேலைவாய்ப்பில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? – மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை அலுவலர் பணிக்கு பிற மாநிலத்தவர்களை அழைக்கும் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் அறிக்கை.
தமிழகத்தில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல் துறை அலுவலர் பணிக்கு பிற மாநிலத்தவர்களை அழைக்கும் மர்மம் என்ன? எதற்காக இந்த வேலை வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை? என தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
- தொல்லியல் அலுவலருக்கான தேர்வில் தமிழை முதன்மை பாடமாக கொண்டு பயின்றவர்களுக்கு வேலை இல்லை என்று அதிமுக ஆட்சி மறுக்கிறது.
- தொல்லியல் அலுவலர் பதவிக்கான கல்வித்தகுதி இருந்தும், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நிராகரித்து அருந்ததியர் சமுதாய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது.
- பிற மாநில மாணவர்களை கலந்தாய்வுக்கு அழைத்து, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ மாணவியரை நிராகரித்தது ஏன்?
- தமிழகத்தில் படிப்போருக்கு வேலை கொடுக்க மறுப்பது ஏன்?
- தேர்வில் நிராகரிக்கப்பட்ட பெரும்பாலான மாணவ மாணவியர்கள் தமிழ்த் துறையை சேர்ந்தவர்கள்.
- தமிழக கல்வெட்டுகள் தமிழில்தான் இருக்கின்றன அப்படியிருக்கும்போது தமிழ் படித்த மாணவ மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காதது ஏன்?
- குளறுபடிகளுக்கு தீர்வு கண்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ மாணவியருக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கலந்தாய்வுக்கு அழைக்கவேண்டும்.
- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அளித்த முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் பயன் தமிழக மாணவ மாணவியருக்கு சென்றிட முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் – தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல்துறை அலுவலர் பணிக்கு பிறமாநிலத்தவரை #TNPSC அழைக்கும் மர்மம் என்ன?
தேர்வில் நிராகரிக்கப்பட்ட பெரும்பாலானோர் தமிழ்வழி பயின்றோர்! புறக்கணிப்பு ஏன்?
தொல்லியல்துறை அலுவலர் தேர்வில் நடக்கும் அநீதியை @CMOTamilNadu களைய வேண்டும்! pic.twitter.com/LEqJmWROeZ
— M.K.Stalin (@mkstalin) December 30, 2020