1.18 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதது ஏன்…? – பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்
கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம்.
கடந்த வாரம் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வை 1.18 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. 1.18 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு ஏன் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
அதன்படி, கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை திருமணம், ஐடிஐ, பாலிடெக்னீக் படிப்புகளில் சேர்ந்ததால் பொது தேர்வு எழுதவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் 26.77 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.