இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு? – சு.வெங்கடேசன் எம்.பி
திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா மத்திய அரசு?
பி.எம். கேர் நிதியின் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் கொள்கலன்களை சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திறந்து வைத்த கொள்கலன்களில் பிஎம் கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் பி.எம்.கேர்-க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது. திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா மத்திய அரசு?’ என பதிவிட்டுள்ளார்.
திறந்து வைத்த கொள்கலன்களில் பிஎம் கேர் நிதி கீழே ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் #PMcare க்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.
திறந்துவைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது.
இது யாருடைய நிதி?
விளக்கம் தருமா ஒன்றிய அரசு? pic.twitter.com/qD3kY5weFO
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 7, 2021