தமிழகத்தில் யாருடன் கூட்டணி? தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதில்
தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்படும் .அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன.பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொள்ளும்.பியூஷ் கோயல் அதிமுகவுடன் பேசுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.