யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம் – கே.பி முனுசாமி
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். இதில் யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம் – கே.பி முனுசாமி பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆதாலியூரில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி பேட்டியளித்துள்ளார். அப்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான். இதில், யார் இடையூறாக வந்தாலும் ஒதுக்கிடுவோம். புதிய கட்சி தொடங்கும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தான் அமைப்போம் என்கிறார்கள். புதிய கட்சி தொடங்குபவர்கள், கருணாநிதி ஆட்சியை அமைப்போம் என்று கூறுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.