பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்-ப.சிதம்பரம்..!

ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது என ப. சிதம்பரம் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகசட்டமன்ற தேர்தலில் தோற்போம் என்ற பயத்தால் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் உள்ளது.
எதற்கு ரூ1000, 500 நோட்டு செல்லாது என அறிவித்தார்கள்..? பின்னர் ரூ.2,000 நோட்டு அச்சடித்து ஏன் நிறுத்தினார்கள்..? மத்தியில் புதிய அரசு அமைந்து விசாரணை நடத்தினால் தெரியவரும் என தெரிவித்தார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவாத மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். தமிழ் மக்களின் துச்சமென அதிமுக ஆட்சி மதிக்கிறது. மக்கள் தங்கள் வலிமையை காட்டுவார்கள். ஆர்கே நகர் தேர்தலில் பணப்புழக்கம் நடந்ததை ஒப்புக் கொண்டு தலைமை தேர்தல் ஆணையர் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுத்தார்..? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிதியமைச்சர் உரையில் பதிலில்லை என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025