இழிசெயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் -மு.க.ஸ்டாலின்
பட்டியலின மக்கள் உரிய அதிகாரம் பெற்று, சமுதாயத்தின் அங்கீகாரத்தை நிரந்தரமாகப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா செய்யப்பட்டார். பின்பு சிந்துஜாவை புவனகிரி காவல்துறை கைது செய்தது.மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.இவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிதம்பரம் அருகில் உள்ள தெற்குத்திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்திய திமுக – பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரின் அதிகாரப் பங்கேற்பில் என்றைக்கும் உறுதி கொண்டுள்ளது”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/zaMgaKfdHz#DMK #MKStalin pic.twitter.com/q5BK4F8x1b
— DMK (@arivalayam) October 11, 2020