அபராதத்தை யார் யார் வசூலிப்பார்.? – பொது சுகாதாரத்துறை இயக்குனர் பதில்.!

அபராதத்தை யார் வசூலிப்பார் என்ற கேள்விக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் பதில் அளித்துள்ளார்.
தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை நேற்று தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி, கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கூறி, தொழிற்துறை இடங்கள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அபராதத்தை யார் வசூலிப்பார் என்ற கேள்விக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் பதில் அளித்துள்ளார். அதாவது, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி ஆகியோர் வசூலிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025