தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ வெற்றி விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி தொடர்ந்து கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். பிக் ஷாட்டுகள் உள்ளன எனத் தெரிவித்திருந்தார் .
சற்று நேரத்திற்கு முன் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் இணைய உள்ள முக்கிய தலைவர் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு “இப்போ மணி 1.30 தானா ஆச்சி ..? 5 மணிக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது. கொஞ்ச நேரம் தானே? உள்ளது. உங்களை இல்லாமல் நாங்கள் கட்சியில் சேர்க்கப் போகிறோம்.
உங்கள் வைத்த தான் கட்சியில் சேர்ப்போம். அவர் கோவையை சேர்ந்தவரா..? அல்லது வேற பகுதியை சேர்ந்தவரா..? என கேள்வி எழுப்பியதற்கு அவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார்..? அவர் எந்த நேரத்தில் வேட்டி கட்டுவார்..? புடவை கட்டுவார்..? என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?
பொறுங்க இன்னும் 4 மணி நேரம்தானே பொறுங்க உங்களை எல்லாம் வைத்துக்கொண்டுதான் எல்லாம் நடக்கும் என கூறினார். எங்கள் கட்சியில் இணைபவர்கள் அனைவரும் எங்கள் கட்சியின் கொள்கைகளை பிடித்து பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்துத்தான் வருகிறார்கள்” என கூறினார்.
இதனால் சற்று நேரத்தில் பாஜகவில் இணையப்போவது அந்த தலைவர் யார் என அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. சமீபத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…