மக்களை நாசமாக்கியது இந்த ஒரு சொல் தான் – சீமான்
இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்?
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. சீமான் அவர்கள் மாதவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இந்த தேசத்தை நாசமாக்கியது இலவசம் ஒரு சொல் தான்.
இலவசங்களைக் கொடுத்தால் யார் உழைக்க வருவார்? யார் வேளாண்மை செய்ய வருவார்கள்? என்று கேள்வி எழுப்பிய சீமான், அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் எப்படி கிடைக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்த நூற்றாண்டில் மக்களை இலவசங்களை கொடுத்து உழைக்காமல் வாழ்வதற்கு தயார் செய்தது ஒரு இழிவான செயல் என தெரிவித்துள்ளார்.