2021ல் முதல்வர் வேட்பாளர் யார் ? முதல்வர் பழனிசாமி விளக்கம்

அதிமுகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள சில பிரமுகர்கள்அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதே சமயத்தில் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் 2021-ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் கூறுகையில்,2021 ஆம் ஆண்டில் அதிமுகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.