ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என பேசி முடிவெடுப்போம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வரும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதையடுத்துவிருதுநகர்,தேனி ,தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இதனிடையே செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,காந்தியின் பி-டீமாக தான் நாங்கள் இருப்போம்.வேறு யாருக்கும் நாங்கள் பி-டீம் இல்லை.தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே எங்களது ஆசை.மக்கள் நீதீ மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமைய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…