திமுக மற்றும் அதிமுக இடையே வார்தைப்போர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.பாஜகவின் தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடந்த முறைக்கு முன்பாக எங்களது அப்போதைய தேசிய தலைவரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அவர்கள் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்,தமிழகத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் கூட ,அதிகமாக ஊழல் நடைபெறக்கூடிய ஒரு மாநிலமாக இந்த மாநிலம் இருக்கிறது என்று அன்றே அவர் குறிப்பிட்டு பேசினார்.பாஜக சமீப காலமாக இரண்டு கட்சிகளும் யார் ஊழல் செய்தார்கள் , என்பதைப்பற்றி வார்தைப்போரில் ஈடுபட்டு வருவதை ,அவர்களே அவர்களுடைய நிலையைப் பற்றி , மக்கள் குறிப்பாக அவர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் பற்றி விவாதிக்கிறார்கள் என்று தான் நாங்கள் பார்க்கிறோம் என்று அதிமுக மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக இடையே 2-ஜி ,ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்குகள் தொடர்பாக வார்த்தை போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…