அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? – சு..வெங்கடேசன் எம்.பி
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் என சு..வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம். தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்.’ என தெரிவித்துள்ளார்.
அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.
ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்.
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள். #Tamil #Hindi
— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 8, 2022