Minister senthil Balaji - Madras High court [File Image]
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை காவலில் இருக்கிறார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் இளங்கோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதனை எம்.பி – எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கானது ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறியது. இதனால், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை யார் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளங்கோ வழக்கு தொடர்ந்தார் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபத்தில் சுந்தர் – சக்திவேல் அடங்கிய அமர்வு, யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தான் தீர்மானிப்பார். அதனால் அவரிடம் முறையிடலாம். மேலும் வழக்கில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகினார்.
இதனை தொடர்ந்து, வழக்கானது நீதிபதிகள் சுரேஷ்குமார் – குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் வரும் திங்கள் கிழமை இந்த வழக்கை விசாரிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
திங்கள் அன்று விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்குமா அல்லது சிறப்பு நீதிமன்றம் விசாரிக்குமா என தெரியவரும். அதன் பிறகே குறிப்பிட்ட நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு விசாரிக்கப்படும்.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…