அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? என்று கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக ஆரம்பிக்கப்பட்டதே அதிமுகவை ஜனநாயக முறையில் மீட்டெடுப்பதற்கு தான். தமிழகத்தில் மாபெரும் சாதனை படைத்து மக்கள் ஆதரவுடன் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவதே எங்கள் கொள்கை, மக்கள் நிச்சியமாக அமமுகவை தேர்ந்தெடுப்பார்கள்.
தப்பித்தவறி திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாங்கல்லாம் எப்போதும் போல மடியில் கனமில்லை, ஆதலால் பொதுக்கூட்டத்துக்கு செல்வோம், ரோட்டில் கூட நிற்போம். ஆனால், அதிமுகவினர் எங்கு செல்வார்கள் என உங்களுக்கு தெரியும். நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார். ஆர்கே நகரில் எப்படி சாதனை படைத்தோமோ, அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை அமைப்போம்.
அம்மாவின் தொண்டர்கள் எங்களுடன் அணி திரள்வார்கள். மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வது, அரசின் திட்டங்கள் மக்களிடம் சேரவில்லை என்பதை காட்டுகிறது. பேரறிஞர் அண்ணா மக்களுக்கு சேவை செய்வதை நோக்கி பயணியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். மத்திய பட்ஜெட் கொஞ்சம் மகிழ்ச்சியையும், நிறைய கவலையையும் தரும் பட்ஜெட்டாக உள்ளது.
தேவை இருந்தால் நாங்கள் யாரை பத்தியும் விமர்சிப்போம். தேவையில்லாமல் ஒருத்தவர்களை குறித்து விமர்சிப்பது அவசியமில்லை. நாங்கள் அதற்கு வந்த அரசியல்வாதியம் கிடையாது. அமமுக, அதிமுகவுடன் இணையும் என்று யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது, உங்களுக்கு, டிடிவி தினகரனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து கேளுங்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…