தமிழக அரசின் கடனை தள்ளுபடி செய்வது யார்…? – சீமான்
கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த கல்வியை நாங்கள் கொண்டுவருவோம் என்றும், தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஓசூரில் வேட்பாளர் கீதாலட்சுமி அவர்களை ஆதரித்து பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகள், தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 6 லட்சம் கோடி கடனில் தமிழகம் உள்ளது. இதனை யார் தள்ளுபடி செய்வார்கள்? ஒரு நாட்டில் விவசாயிகள் ஏன் கடனாளியாகி கடன் வாங்கி விவசாயம் செய்கிறான்? அவனை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? தன் வீட்டில் நகை அடமானம் வைக்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது யார்? இந்த ஆட்சியாளர்கள் தானே, அதனால் தான் அவர்களை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ஆட்சி முறையை கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா, அந்த கல்வியை நாங்கள் கொண்டுவருவோம் என்றும், தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்