யாருடன் கூட்டணி- கமல்ஹாசன் ஆலோசனை..!
கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கினார். மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ளது. இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒருவர் கூட மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகவில்லை. இந்தநிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான ஒரு கூட்டணி இடம் மக்கள் நீதி மய்யம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள்.. மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு.!
இன்று கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அவர்கள் இங்கு போட்டியிடுவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கமல்ஹாசன் இடம்பெறும் கூட்டணியில் 2 தொகுதிகள் கேட்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கோவை அல்லது தென் சென்னையில் கமல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.