மகுடம் சூட்டப்போவது யார்? நாளை வெளியாகிறது ரிசல்ட்!
தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களைவை தொகுதியை தவிர்த்து இந்தியாவில் மொத்தம் 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் உடன் 18 தொகுதிகளுக்கு இடை தேர்தலும் நடைபெற்று.
நடைபெற்ற அத்தனை தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக முடிவுகள் வெளியாகி உள்ளது .
இருந்தாலும் நாளை அனைத்து மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பது நாளை வெளியாகும் முடிவில் தெரிந்து விடும். மேலும், பெரும்பான்மை எந்த கட்சிக்கு கிடைக்கும், எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கடைசியில் யார் மற்ற கட்சிக்கு தாவி ஆதரவு தெரிவிக்க உள்ளனர் என்பது நாளை பிற்பகல் தெரிந்து விடும்.
DINASUVADU