தமிழக தேர்தல் முடிவுகள்: நட்சத்திர தொகுதிகளில் யார் யார் முன்னிலை? முழு விபரம்!

Default Image

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நட்சத்திர தொகுதிகளில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என்பது குறித்து காணலாம்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர தொகுதிகளாக கருதப்படும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கொளத்தூர், கோவை தெற்கு, எடப்பாடி, போடிநாயக்கனூர், கோவில்பட்டி, தாராபுரம், திருவெற்றியூர், காட்பாடி, அரவக்குறிச்சி தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறித்து காணலாம்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி:

இந்த தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, 5,847 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

போடிநாயக்கனூர்:

தேனீ மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ், 6,414 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன், 6,538 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூர்:

கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6,395 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், 2,698 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

எடப்பாடி:

எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று, 19,680 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத், 10,269 வாக்குகளை பெற்று தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 8,474 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், 6,162 வாக்குகள் பெற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சீனிவாசன் 4,168 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளனர்.

காட்பாடி:

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் 9,047 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து களம்கண்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு, 11,769 வாக்குகளை பெற்று, 2,722 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கோவை தெற்கு:

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 70 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் கமல்ஹாசன், வானதி ஸ்ரீனிவாசனுக்கு பின்னடைவு. மேலும், கோவை தொகுதியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மயூரா ஜெயகுமார், கமல்ஹாசன் கடுமையான போட்டி நிலவுகிறது 

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 5,198 வாக்குகளை பெற்று தொடர்ந்து மூன்றாம் இடம் பெற்று, பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ முன்னிலையில் உள்ளார்.

திருவெற்றியூர்:

திருவெற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு. அவரை எதிர்த்து திமுக சார்பில் கே.பி.சங்கரும், அதிமுக சார்பில் குப்பனும் போட்டியிடுகின்றனர்.

விருத்தாச்சலம்:

விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக கட்சியின் வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த், 2,325 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், 6,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ராயபுரம்:

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி, 572 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு:

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்பு, 5,093 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், தொடர்ந்து முன்னணி வகிக்கிறார்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளரான எல்.முருகன் 1,679 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி, 10,168 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi