தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!
சமீபத்தில் தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. அதிமுகவின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி, திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலின் அமமுக சார்பில் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டு களமிறங்கினர்.
இன்று, மேற்கு வங்கத்தில் 8-ஆம் கட்ட வாக்குபதிவு முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்தி வெளியிட்டுள்ளது.
திமுக: 160-170 = 48.91%
அதிமுக: 58-68 = 35.05%
அமமுக: 4-6 = 6.40%
மக்கள் நீதி மய்யம்: 0-2 = 3.62%
நாம் தமிழர்: 0 = –
மற்றவை : 0 = 6.02%